For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குளிர்காலத்தில் நீங்கள் விபத்தில் இருந்து தப்பிக்க சூப்பர் டிப்ஸ்..!! வாகன ஓட்டிகளே தெரிஞ்சிக்கோங்க..!!

08:13 AM Dec 16, 2023 IST | 1newsnationuser6
குளிர்காலத்தில் நீங்கள் விபத்தில் இருந்து தப்பிக்க சூப்பர் டிப்ஸ்     வாகன ஓட்டிகளே தெரிஞ்சிக்கோங்க
Advertisement

குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில், கூடவே பனியும் வர ஆரம்பித்துவிட்டது. இனிமேல் தான் நாம் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும். ஏனென்றால், குளிர்காலத்தில் பனி அதிகமாக சூழ்ந்திருப்பதால் எதிரில் வரும் வாகனங்களை உங்களால் தெளிவாக பார்க்க முடியாது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நம் வாகனத்தை மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். மூடுபனி நிறம்பிய சாலையில் எப்படி பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிச் செல்லலாம் என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

கார் விளக்குகளை ஸ்மார்டாக பயன்படுத்துங்கள் :

குளிர்காலத்தில் வாகனத்தில் செல்லும் போது பகல் நேரமாக இருந்தால் கூட லோ பீம் ஹெட்லைட்டை உபயோகிக்க வேண்டும். ஹை பீம் பயன்படுத்தினால் அது பனியில் எதிரொலித்து மற்ற ஓட்டுனர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். உங்கள் காரில் ஃபாக் லைட் இருந்தால், கடுமையாக பனி சூழ்ந்திருக்கும் சாலையில் அதை பயன்படுத்தலாம்.

மெதுவான வேகம் மற்றும் இடைவெளி :

சாலையில் பனி அதிகமாக இருக்கும் போது மெதுவாக செல்ல வேண்டும். அப்போதுதான் எதிரில் வரும் வாகனங்களை சரியாக பார்த்து அதற்கேற்றார்ப் போல் ஓட்ட முடியும். உங்கள் முன் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் காருக்கும் இடையே சரியான இடைவெளி இருக்க வேண்டும். ஏனென்றால், பனி சுழ்ந்திருந்தால் நாம் எவ்வளவு இடைவெளியில் செல்கிறோம் என கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை திடீரென்று முன்னால் செல்லும் கார் பிரேக் பிடித்தால் கூட, இடைவெளி விட்டு செல்லும் போது உங்களால் எளிதில் சமாளிக்க முடியும்.

எச்சரிக்கையோடு இருங்கள் :

உங்கள் கவனம் எப்போதும் சாலையில்தான் இருக்க வேண்டும். கார் ஓட்டும் போது செல்போனை பார்ப்பதோ அல்லது ரேடியோவை சரி செய்வதோ இருக்க கூடாது. உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்ணாடி மூலம் தெரிந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் பின்னால் வரும் காரின் சத்தத்தை கேட்க உங்கள் கார் கதவு விண்டோவை இறக்கிக் கொள்ளலாம்.

திட்டமிடல் :

எப்போதும் நீங்கள் பழக்கப்பட்ட சாலையில் பயணம் செய்யுங்கள். அங்கு பனி சூழ்ந்திருந்தாலும் அந்த சாலையை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். கடுமையான பனி சூழ்ந்திருக்கும் சமயத்தில் குறுக்கு பாதை அல்லது உங்களுக்கு தெரியாத பாதையை பயன்படுத்தாதீர்கள்.

கவனம் :

சாலைகளில் வரக்கூடிய குறுக்குச்சாலைகளை மிகவும் கவனமாக கடக்க வேண்டும். உங்கள் வேகத்தை குறைத்து, நாலாபுறமும் பார்த்த பிறகே சாலைகளை கடக்க வேண்டும்.

பொறுமை அவசியம் :

பனியில் உங்களால் கார் ஓட்ட முடியுமா என சந்தேகம் இருந்தால், காரை ஓரமாக நிறுத்திவிட்டு பனி மறைந்து நன்றாக சாலை தெரியும் வரை காத்திருங்கள். உங்கள் காரை பிறருக்கு இடைஞ்சல் இல்லாத பகுதியில் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளுங்கள். காரை நிறுத்தும் போது பார்க்கிங் லைட் மற்றும் எச்சரிக்கை விளக்குகளை ஒளிர விடுங்கள்.

Tags :
Advertisement