For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண் குழந்தைகளுக்கு சூப்பர் திட்டம்..!! ரூ.25 லட்சத்தை மொத்தமாக அள்ளலாம்..!! பெற்றோர்களே நோட் பண்ணுங்க..!!

01:54 PM Apr 12, 2024 IST | Chella
பெண் குழந்தைகளுக்கு சூப்பர் திட்டம்     ரூ 25 லட்சத்தை மொத்தமாக அள்ளலாம்     பெற்றோர்களே நோட் பண்ணுங்க
Advertisement

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பலவிதமான பாலிசிகளை வழங்கி வருகிறது. பெண் குழந்தைகளின் நலன் கருதி கன்யாடன் பாலிசியை அளித்து வருகிறது. இத்திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் ஒரு வயது முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம். 13 முதல் 25 ஆண்டுகள் வரை இந்த பாலிசியின் காலம் ஆகும். பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் செலுத்தலாம். 25 ஆண்டு பாலிசியை தேர்வு செய்தால், 22 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும்.

Advertisement

இந்தத் திட்டம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். இந்த பாலிசியை எடுக்க, பெண்ணின் தந்தை 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பாலிசியை எடுத்த 3ஆம் ஆண்டில் இருந்து கடன் வசதியும் கிடைக்கும். 2 ஆண்டுகளுக்கு பிறகு, பாலிசியை சரண்டர் செய்ய விரும்பினால், அந்த வசதியும் உள்ளது. ஒரு மாதத்தில் பிரீமியம் செலுத்தாவிட்டால், அடுத்த 30 நாட்களுக்குள் அபராதம் இல்லாமல் பிரீமியத்தை செலுத்தலாம்.

இந்த பாலிசி மூலம் 2 வழிகளில் வரிச் சலுகை பெறலாம். காப்பீட்டுத் தொகை குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதிகபட்ச வரம்பு இல்லை. 25 வருட பாலிசி எடுத்து ரூ.41,367 ஆண்டு பிரீமியம் செலுத்தினால், மாதாந்திர பிரீமியம் தொகை ரூ.3,447 ஆக இருக்கும். 22 ஆண்டுகளுக்கு இவ்வாறு முதலீடு செய்தால், 25 ஆண்டுகளுக்குப் பின் ரூ.22.5 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

பாலிசி எடுத்திருக்கும்போது தந்தை இறந்துபோனால், அடுத்து வரும் காலத்திற்கு அவரது பெண் பிரீமியம் செலுத்த வேண்டாம். பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும். இது தவிர, 25 ஆண்டுகள் முடியும் வரை ஆண்டுதோறும் ரூ.1 லட்சமும், 25ஆம் ஆண்டு முதிர்வுத் தொகையும் வழங்கப்படும். சாலை விபத்தில் தந்தை இறந்தால், நாமினிக்கு விபத்து மரணத்திற்கான பலனாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

Read More : Rain | தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!!

Advertisement