For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சூப்பர் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சௌரப் நெட்ரவால்கர்..!! பாகிஸ்தானை பந்தாடிய இந்தியர்..!! யார் இவர்..?

Saurabh has been proving himself by playing in local tournaments in America. It's the result that got him into the US team.
11:38 AM Jun 07, 2024 IST | Chella
சூப்பர் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சௌரப் நெட்ரவால்கர்     பாகிஸ்தானை பந்தாடிய இந்தியர்     யார் இவர்
Advertisement

நடப்பு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அமெரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய அமெரிக்காவும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 159 எடுத்தது. இதனால், ஆட்டம் டிரா ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஆமிரின் சொதப்பலான பந்துவீச்சாள் அமெரிக்கா 18 ரன்கள் எடுத்தது. பின்னர், பாகிஸ்தான் விளையாட அமெரிக்கா தரப்பில் பந்துவீசினார் சௌரப் நெட்ராவல்கர். சிறப்பாக பந்துவீசிய சௌரப் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

Advertisement

சௌரப் ஏற்கனவே இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை சாய்த்து இருந்தார். சூப்பர் ஓவரிலும் ஒரு விக்கெட் எடுத்து அசத்தினார். பாகிஸ்தான் தோல்வியை தழுவ காரணமாக இருந்த சௌரப் நெட்ராவல்கர் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர். அதுமட்டுமின்றி, அவர் இந்திய அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். மும்பையை சேர்ந்தவரான இவர், இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான சௌரப் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்துள்ளார்.

ரஞ்சி டிராபி போட்டிகளில் இவர் விளையாடும் போது கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனாகட் மற்றும் சந்தீப் ஷர்மா ஆகியோருடன் சேர்ந்து விளையாடி இருக்கிறார் என்பது தான் ஆச்சர்யமான தகவல். மேலும், 2010 யு-19 இளையோர் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி 9 விக்கெட்டுகளையும் சாய்த்தார். அந்தப் போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசியவர் சௌரப் நெட்ராவல்கர், 5 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அந்தப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாமும் விளையாடி இருந்தார். ஆம், பாபர் அசாம் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணியை 14 வருடங்களுக்கு பிறகு பழி தீர்த்துள்ளார் சௌரப்.

அமெரிக்காவின் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தன்னுடைய நிரூபித்து வந்துள்ளார் சௌரப். அதனுடைய பலன்தான் அவரை அமெரிக்க அணியில் சேர்த்துள்ளது. 32 வயதான அவர் அமெரிக்காவுக்காக 48 ஒரு நாள் மற்றும் 29 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை சாத்தியப்படுத்திய சௌரப் நெட்ராவல்கரை இந்திய ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Read More : பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு..!! நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் ராகுல் காந்தி..!!

Tags :
Advertisement