சூப்பர்..!! வெறும் 9 நிமிடங்கள் சார்ஜ் போட்டால் போதும்..!! 965 கிமீ பயணிக்கலாம்..!! சாம்சங் நிறுவனத்தின் அசத்தல் பேட்டரி..!!
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தினால் வாகனங்களின் பெருக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மூலம் இயங்கும் வாகனங்கள், கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளிப்படுத்துகின்றன.
இதனால், பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றன. ஆனால், பேட்டரி சார்ஜிங், மைலேஜ் மின்சார வாகனங்களுக்கு பெரும் தடையாக உள்ளன. இதனால், மின் வாகனங்களின் பக்கம் செல்ல மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்த சிக்கலை 2027ஆம் ஆண்டுக்குள் தீர்க்க உத்தேசித்த சாம்சங் நிறுவனம், வெறும் 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து 965 கிமீ மைலேஜ் தரும் பேட்டரியை தயாரித்துள்ளது. இது 20 ஆண்டுகள் வரை வேலை செய்யும் என்றும் இந்த பேட்டரியை எந்த வாகனத்திலும் பயன்படுத்தலாம் என்றும் தெரிகிறது.
Read More : கல்லீரலுக்கு ஆபத்து..? இனி ஜாக்கிரதையா இருங்க..!! லிமிட் தாண்டாதீங்க..!!