For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! தண்ணீர் பாட்டில் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!!

04:04 PM Apr 27, 2024 IST | Chella
ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்     தண்ணீர் பாட்டில் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
Advertisement

வந்தே பாரத் மற்றும் சதாப்தி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சென்னை சென்ட்ரல் - மைசூர் உள்பட பல முக்கிய நகரங்களுக்கு இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிவேகமாக செல்வதாலும், ஸ்டேஷன்களில் சில நிமிடம் மட்டுமே நின்று உடனடியாக கிளம்புவதாலும் பயணிகளால் வெளியே சென்று உணவு வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால், டிக்கெட் முன்பதிவின்போதே நம்மால் உணவுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்த முடியும். பிறகு ரயில் பயணத்தின் நம் இருக்கைக்கே உணவு வந்துவிடும். இந்த உணவோடு தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். ரயில் நீர் என்ற அந்த தண்ணீர் பாட்டில் 1 லிட்டர் அளவு கொண்டதாக உள்ளது. இந்நிலையில் தான், தண்ணீர் பாட்டில் வழங்கும் முறையில் ரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதாவது, ரயிலில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு பதில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது வந்தேபாரத், சதாப்தி ரயில்களில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கும்போது பயணிகள் அதனை முழுவதுமாக குடிப்பது இல்லை. பாதியளவு தண்ணீரை மிச்சம் வைத்து செல்கின்றனர்.

இப்படி தண்ணீர் வீணாவதை தடுக்கவே ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி, முதலில் ரயில் பயணிகளுக்கு அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். அதனை முழுவதுமாக பயன்படுத்திய பிறகு பயணிகள் தேவையென்றால், இன்னொரு அரை லிட்டர் பாட்டில் தண்ணீரை கேட்டு பெற்று கொள்ளலாம். இதற்கு தனியாக பணம் செலுத்த தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Read More : ’உன்னால குழந்தை பெத்துக்கவே முடியல’..!! ’நீயெல்லாம் பேசுறியா’..? திட்டிய தந்தையை தீர்த்துக் கட்டிய மகன்..!!

Advertisement