ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு..!!
தமிழ்நாட்டில் பாமாயில், துவரம் பருப்புகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும், ரேஷனில் இந்த பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரேஷன் கடைகளில், சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், 1 கிலோ கனடா மஞ்சள் பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவற்றை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறது. ஆனால், ரேஷனில் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்தபடியே இருக்கின்றன.
முன்னதாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில், “அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எண்ணெய், பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பது விலை கண்காணிப்புக் குழுவுக்கு தெரியுமா? எண்ணெய், பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும். மளிகைப் பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும்” என்று கேட்டிருந்தார்.
ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயிலுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியான நிலையில், டாக்டர் ராமதாஸின் இந்த கோரிக்கையானது மிகுந்த கவனத்தை ஈர்த்திருந்தது. அதுமட்டுமின்றி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என்று திமுக ஏற்கனவே வாக்குறுதியில் அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டு, தென்னை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போது பாமாயிலை உயர்த்தி தரும்படியான கோரிக்கையை டாக்டர் ராமதாஸ் வைத்துள்ளார்
அப்படியானால் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுமா? பாமாயில் வழங்கப்படுமா? அல்லது இரண்டுமே வழங்கப்படுமா? என்று தெரியவில்லை. ஆனால், பாமாயில், துவரம் பருப்புகளின் பற்றாக்குறையை தீர்க்க அரசு அடுத்த அதிரடி மேற்கொண்டுள்ளது. தற்போது 20,000 டன் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் பருப்பு 2 கோடி எண்ணிக்கையில் ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட் வாங்கும் பணியில் வாணிபக் கழகம் ஈடுபட்டுள்ளதாம். இதையடுத்து, பாமாயில், துவரம் பருப்புகளுக்கான பற்றாக்குறை விரைவில் நீங்கும் என்றும், அனைவருக்குமே ரேஷனில் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
Read More : மக்களே..!! குளு குளு அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..!! எங்கெங்கு மழை பெய்யும்..?