For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிஃஎப் ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..!! இனி உங்கள் கைக்கு ரூ.1 லட்சம் கிடைக்கப் போகுது..!!

05:30 AM May 16, 2024 IST | Chella
பிஃஎப் ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்     இனி உங்கள் கைக்கு ரூ 1 லட்சம் கிடைக்கப் போகுது
Advertisement

பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையாகும். நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகையும், பணியாளர் சார்பில் குறிப்பிட்ட தொகையும் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்படி 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்த தொகையை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.

Advertisement

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, இந்த சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதிய நன்மைகள் தவிர பல்வேறு நன்மைகள் பிஃப் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கிறது. இந்நிலையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு அவசர மருத்துவ தேவைக்கு முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறுவதற்கான தகுதி வரம்பை, ரூ.50,000இல் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் ஏப்ரல் 16ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட EPFO சுற்றறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டது.

அதில் “68J இன் கீழ் ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரையிலான ஆட்டோ க்ளைம் செட்டில்மென்ட் வரம்பை அங்கீகரித்துள்ளது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஎஃப் பயனர்கள் குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகளின் கீழ், ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் மருத்துவமனையில் அனுமதி, பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் காசநோய், பக்கவாதம், புற்றுநோய், மனச்சோர்வு அல்லது இதய நோய்கள் போன்ற தீவிரமான நோய்களுக்குப் பகுதியளவு திரும்பப் பெறுவதைக் கோரலாம்.

அதற்கு ஒரு ஊழியரின் பிஎஃப் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் இருப்பு இருக்க வேண்டும். இந்த செயல்முறைக்கு படிவம் 31 தேவைப்படுகிறது. அதனுடன் பணியாளரின் நிறுவனம் மற்றும் மருத்துவரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் தேவை. அவசர மருத்துவ தேவைக்காக பிஎஃப் பணத்தில் தங்கள் பங்குக்கு சமமான நிதியை வட்டியுடன் அல்லது அவர்களின் மாத சம்பளத்தின் 6 மடங்கு தொகையுடன் எடுக்கலாம். இதனை தனது மருத்துவ செலவுக்கோ அல்லது, பெற்றோர், மனைவி அல்லது குழந்தைகளின் மருத்துவ செலவுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே போல் ஒரு புதிய வீட்டை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு பிஎஃப் கணக்கில் இருந்து முன்கூட்டியே பணம் எடுத்துக் கொள்ளலாம். வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பணத்தைப் பெறலாம். இதற்கிடையே, இபிஎஃப்ஓ அமைப்பு யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (UAN) அமைப்பையும் செயல்படுத்தியுள்ளது. இது முதலாளியின் சான்றொப்பம் இல்லாமல் உரிமைகோரல் சமர்ப்பிப்பை அனுமதிக்கிறது. பிஎஃப் பயனர்களின் UAN அவர்களின் ஆதார் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டவுடன், சந்தாதாரர்கள் ஒரு முறை கடவுச்சொல் மூலம் சரிபார்த்த பிறகு நேரடியாக EPFO க்கு உரிமைகோரல் படிவங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இரவு நேரத்தில் இந்த இடத்தில் மட்டும் தூங்காதீங்க..!! மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரிய ஆபத்து காத்திருக்கு..!!

Advertisement