சூப்பர் அறிவிப்பு..!! இந்த விஷயத்துல தமிழ்நாட்டை அடிச்சிக்க முடியாது..!! மாணவர்களுக்கு இனிப்பான செய்தி..!!
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சர்க்கரை பொங்கல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 30 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவை சாப்பிடுவதில்லை.
பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் இந்த திட்டம் பற்றி பேசியிருக்கிறார்.
என்னென்ன உணவுகள்..?
திங்கள் கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா / சேமியா உப்புமா / அரிசி உப்புமா / கோதுமை ரவை உப்புமா
செவ்வாய் கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி / சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி
புதன்கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய கூடிய ரவா பொங்கல் / வெண் பொங்கல்
வியாழக்கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா / அரிசி உப்புமா / ரவா உப்புமா / கோதுமை ரவை உப்புமா
வெள்ளிக்கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / ரவா காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளன்று பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சர்க்கரை பொங்கல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாள் அன்று சர்க்கரை பொங்கல் வழங்கப்படும். மதிய உணவுடன் சேர்த்து சர்க்கரை பொங்கல் வழங்கப்படும். 42 லட்சத்து 71 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி ரூபாய்க்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.