For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக விண்வெளி பயணம்!… 59வயதில் 3வது சாதனை!… எப்போது பூமிக்கு திரும்புவார்கள்?

06:09 AM Jun 06, 2024 IST | Kokila
சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக விண்வெளி பயணம் … 59வயதில் 3வது சாதனை … எப்போது பூமிக்கு திரும்புவார்கள்
Advertisement

Sunitha Williams: சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisement

குஜராத்தை சேர்ந்த தீபக், ஸ்லோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ் (58). அமெரிக்க கப்பல் படை விமானியான இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதன்முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இதனையடுத்து 2012-ம் ஆண்டில் இரண்டாம் முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.

இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர். அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் உருவாக்கிய ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்வெளி ஓடம் சோதனை முறையில் முதல்முறையாக மே 7-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதாக இருந்த இந்த ஸ்டார்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோரும் செல்ல இருந்தார். இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள்களை அனுப்பக்கூடிய 2வது தனியார் நிறுவனம் என்ற பெருமையை போயிங் பெறும் என கூறப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 3 முறை திட்டமிட்டும், இந்தப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், போயிங் நிறுவனத்தின், 'ஸ்டார்லைனர்' என்று பெயரிடப்பட்டுள்ள ராக்கெட் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதில், இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், 59 மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், 61, பயணித்தனர்.

போயிங் நிறுவனத்தின் ராக்கெட் ஆட்களை சுமந்து செல்லும் முதல் விண்வெளி பயணம் இது. விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இவர்கள் சென்று திரும்ப உள்ளனர்.

Readmore: ஷாக்!… எதிர்வரும் ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்!… ஐ.நா. கடும் எச்சரிக்கை!

Tags :
Advertisement