அய்யய்யோ.. நாளைக்கு திங்கள் கிழமையா..? ஞாயிறு இரவு திடீர் கவலை வருதா.. அறிகுறிகள் என்ன..? தவிர்ப்பது எப்படி..?
இன்றைய வேகமான, அவசர உலகில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறுகிய கால மன அழுத்தம் சில சமயங்களில் ஒரு உந்துதலாக செயல்படும் அதே வேளையில், நாள்பட்ட மன அழுத்தம் ஒரு குறிப்பிடத்தக்க உடல்நலக் கவலையாகும்,
இந்தியாவில் பணிக்கு செல்பவர்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி 45% அதிகமானோர் வார இறுதி நாள் விடுமுறை முடிந்து வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை வேலைக்கு செல்லும் முன்பே ஞாயிற்றுக்கிழமை மாலையே கவலை உணர்வை அனுபவிக்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளது. வேலை வாழ்க்கை ஆரோக்கியத்தை பாதித்திருப்பதாகவும் கடுமையான பணியிட சூழ்நிலைகள் மன அழுத்தத்துக்கு பங்களிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிறு மாலையே திங்கள் கிழமை வேலை குறித்து கவலையடைய என்ன காரணம், இதிலிருந்து மீள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஞாயிறு மாலை அல்லது இரவு பயத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
- அச்சம் அல்லது அழிவு உணர்வு
- வெறுப்பு அல்லது கோபம்
- வயிற்று பகுதி அசெளகரியம்
- தலைவலி
- வேகமான இதயத்துடிப்பு
- எரிச்சல் உணர்வு
- அமைதியின்மை
- எரிச்சல்
- வரவிருக்கும் வாரம் மற்றும் தேவையற்ற எண்ணங்கள்
- ஞாயிறு இரவை கழிக்க சிறந்த வழி இல்லாதது
- ஞாயிற்றுக்கிழமை பயமுறுத்தும் காரணங்களை புரிந்து கொண்டு அதிலிருந்து மீள்வது மட்டுமே ஞாயிறு இரவு கவலையை சரி செய்ய உதவும்.
ஞாயிறு இரவு திடீர் கவலை க்கு காரணம்?
* வேலை தொடர்பான கவலை எப்போதும் இருந்தால் அடுத்த நாள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பதே ஒரு வித அழுத்தத்தை உண்டு செய்யும். இந்த கவலை முன்கூட்டியே தோன்றும்.
* வேலை சுமை இல்லை. ஆனால் வரும் வாரத்தில் முடிக்க வேண்டிய பணிகள் அதிகம் இருக்கலாம். முக்கிய பணிகளுக்கான தொடக்க வேலைகள் இருக்கலாம். திட்டமிடுதல் இருக்கலாம். இவையெல்லாம் முன்கூட்டியே தேதிகளை குறிப்பிட்டு வைக்கும் போது ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த கவலை உணர்வு வந்துவிடலாம்.
* வரும் வாரம் குடும்பத்தில் முக்கிய நிகழ்வு இருந்து அலுவலக வேலையையும் முடிக்க வேண்டும் என்னும் போது இந்த அழுத்தம் இருக்கலாம்.
* குறிப்பிட்ட வாரத்துக்குள் முடிக்க வேண்டிய வேலையை முடிக்காத சூழலில் அடுத்த வரவிருக்கும் வாரத்தில் ஒப்படைக்கும் நாள் வரும் போது இந்த அழுத்தம் சற்று கூடுதலாக இருக்கும்.
தவிர்ப்பது எப்படி..?
* வேலை மற்றும் வாழ்க்கை இரண்டையும் சமன் செய்ய கற்றுகொள்ள வேண்டும். இல்லையெனில் இரண்டு இடங்களிலும் சிக்கலை சந்திக்கலாம்.
* பொறுப்புகளை தள்ளிப்போடுவது அல்லது புறக்கணிப்பது சமாளிப்பதற்கான பயனுள்ள வழிகள் அல்ல. ஏனெனில் இது தற்காலிகமாக நன்றாக இருக்கும். ஆனால் அது எதிர்காலத்தில் மேலும் சிக்கல்களை உருவாக்கும். வேலைகள் அதிகரிக்கும். காலக்கெடு முடியும். அப்போது வேலையில் சிறந்த முறையில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டாகலாம்.
* திட்டமிட்டு பணிகள் செய்தாலும் எப்போதும் கவலை சூழ்ந்துகொண்டே இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
* இயற்கை சூழலுடன் நேரம் செலவிடுவது.. செல்போன் பயன்பாட்டை குறைத்தல், நண்பர்களுடம் பேசுதல், உடற்பயிற்சி, தியானம் போன்றவை மன அழுத்தத்தை குறைக்க உதவும், ஞாயிறு இரவு கவலையை அகற்ற உதவும்.
Read more ; கிறிஸ்துமஸ் வரப்போகுது.. கேக் செய்யலன்னா எப்படி..? ஓவன் வேண்டாம்.. இதோ ஈசி ரெசிபி..