காதலியை கரம்பிடித்தார் சன் டிவி சீரியல் நடிகர்..!! அட இவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா..?
சன் டிவியில் 1,000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்பே வா. இந்த சீரியலில் ஹீரோவாக விராட்டும், ஹீரோயினாக டெல்னா டேவிஸும் நடித்து வருகின்றனர். கடந்த 2020இல் தொடங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் அண்மையில் படமாக்கப்பட்டது.
சீரியல் முடிந்த கையோடு அந்த தொடரின் நாயகன் விராட்டுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் நவீனா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதில் உறவினர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விராட் - நவீனா ஜோடியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இருவருமே நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். குடும்பத்தினரின் கிரீன் சிக்னலுக்காக காத்திருந்த இந்த ஜோடி, தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
Read More : நாளை வாக்குப்பதிவு..!! ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!!