முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்றுமுதல் கோடை லீவு விட்டாச்சு!... மேலும் மேலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு!... வெளியான முக்கிய தகவல்!

05:15 AM Apr 24, 2024 IST | Kokila
Advertisement

Summer vacation: தமிழ்நாட்டில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று(ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதியோடு முடிவு பெற்றது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்.5-ம் தேதியோடு பருவத் தேர்வுகள் முடிந்தன. இவர்களுக்கு ஏப்.6ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, 4 முதல் 9ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.10, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ஆண்டு இறுதித் தேர்வுகள், ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்குத் தள்ளி வைக்கப்பட்டன. ரம்ஜான் பண்டிகை, தேர்தல் பணிகள் காரணமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டது. பின்பு ஏப்ரல் 22ம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடந்து இறுதி தேர்வுகள் முடிவடைந்தது.

அதன்படி, தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேற்றுடன் ஆண்டு இறுதித் தேர்வு முடிவடைந்தது. இதையடுத்து, இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், பள்ளி இறுதி வேலை நாளான ஏப்ரல் 26ஆம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வர வேண்டியது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத் தாள் மதிப்பீடு மற்றும் பிற அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். எனினும் இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதனாலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. எனினும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: இந்தியாவின் முதல் ஆல் இன் ஒன் பேமண்ட் சாதனம்!… ‘BharatPe One’ அறிமுகம்!… முதற்கட்டமாக 100 நகரங்களில் மாஸ் திட்டம்!

Advertisement
Next Article