For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாளைமுதல் கோடை விடுமுறை!… அவசர வழக்குகள் இந்த நாட்களில் விசாரணை!... ஐகோர்ட் பதிவாளர்!

05:40 AM Apr 30, 2024 IST | Kokila
நாளைமுதல் கோடை விடுமுறை … அவசர வழக்குகள் இந்த நாட்களில் விசாரணை     ஐகோர்ட் பதிவாளர்
Advertisement

Chennai High court: நாளைமுதல் ஜூன் 2 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை ஐகோர்ட்டுகளுக்கு வரும் மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை தாக்கல் செய்தால் விசாரிப்பதற்கு வசதியாக விடுமுறை கால நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை என இரு உயர் நீதிமன்றங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். விடுமுறை கால அவசர வழக்குகளை வாரந்தோறும், திங்கள் கிழமை மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய நாட்களில் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் மே மாதம், 8, 9-ந்தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.குமரேஷ்பாபு, ஆர்.கலைமதி ஆகியோரும், 15, 16-ந்தேதிகளில் நீதிபதிகள் பி.டி.ஆஷா, ஆர்.சக்திவேல், என். செந்தில்குமார் ஆகியோரும், 22, 23-ந்தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.சரவணன், பி.பி.பாலாஜி ஆகியோரும், 29, 30-ந்தேதிகளில் நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், வி. லட்சுமி நாராயணன் ஆகியோரும் அவசர வழக்குகளை விடுமுறை காலத்தில் விசாரிப்பார்கள்.

இதேபோல ஐகோர்ட்டு மதுரை கிளையில் மே 8, 9-ந்தேதிகளில் நீதிபதிகள் பி.வேல்முருகன், அப்துல்குத்தூஸ், பி.தனபால் ஆகியோரும், 15,16-ந்தேதிகளில் பி.வேல்முருகன், பி.வடமலை, கே.ராஜசேகர் ஆகியோரும், 22, 23-ந்தேதிகளில் நீதிபதிகள் ஆர்.என். மஞ்சுளா, எஸ்.ஸ்ரீமதி, சி.குமரப்பன் ஆகியோரும், 29, 30-ந்தேதிகளில் நீதிபதிகள் ஆர். விஜயகுமார், எல். விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் வாரம்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Readmore: நடிகர் விஜயின் மாமனார் மாமியாரை பார்த்துள்ளீர்களா..! வெளியான புகைப்படம்…!

Advertisement