For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட் நியூஸ்...! மே 1 முதல் ஜுன் 2-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை...!

06:10 AM Mar 17, 2024 IST | 1newsnationuser2
குட் நியூஸ்     மே 1 முதல் ஜுன் 2 ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை
Advertisement

புதுவையில் 2024 - 25 ம் ஆண்டுக்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை மார்ச் 25, 2024-ல் இருந்து நடைபெற உள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்ட செய்தி குறிப்பில்; புதுவையில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்நிலையில், 2023 - 24 ம் கல்வியாண்டு முதல் அனைத்து அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலும் மற்றும் 11-ம் வகுப்பிலும் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் இருந்து மாற்றப்பட்டு, சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் மட்டும் தமிழ்நாடு பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டான 2024 - 25 முதல், 1 முதல் 12ம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இதற்கான கல்வியாண்டு நாட்காட்டியும், அரசாணையும் கல்வியமைச்சர் நமச்சிவாயம் முன்னரே வெளியிடப்பட்டுள்ளார். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ வாரியத்தின் விதிமுறைகளின் படி பள்ளிகள் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 31, 2025 வரை நடைபெறும்.

மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் 31ம் தேதி வரையிலும் மற்றும் மே 1 முதல் ஜுன் 2-ம் தேதி வரையிலும் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 3-ம் தேதி முதல் பள்ளிகள் தொடர்ந்தது நடைபெறும். 2024 - 25 ம் ஆண்டுக்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை மார்ச் 25, 2024-ல் இருந்து நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement