கொளுத்தும் கோடை வெயில்: இந்த மசாலாப் பொருட்களைச் உணவில் சேர்த்தால் உடலில் வெப்பம் அதிகரிக்கும்..!
கோடைக்காலத்திற்கு ஏற்றார்போல் நம் உணவு பொருட்களில் நாம் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. ஆரோக்கியமாக, அதுவும் குளிர்ச்சியான உணவுகளை உண்ணுவது தான் இந்த வெயிலுக்கு நன்மையாக இருக்கும்.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கோடை காலம் கொடூரமானது. வெயில் காரணமாக பலர் பசியின்மை, அஜீரணம், நீர்ச்சத்து குறைபாடு, எரிச்சல், சோர்வு, வியர்வை போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். கோடை வெப்பம் உங்கள் ஆற்றல் அளவைக் குறைக்கலாம். உணவில் சில மசாலாப் பொருட்களைச் சேர்ப்பதால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். கோடையில் எந்தெந்த மசாலாப் பொருட்களைக் குறைக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
மிளகாய் பொடி: மிளகாய் தூள் மசாலாப் பொருளாகவும், நம் உணவில் நிறம் சேர்க்கவும் பயன்படுகிறது. ஆனால் அதை அதிகமாக சேர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மிளகாய் போன்ற சூடான, காரமான உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். இது வயிறு, மார்பு பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் அதிக வியர்வையை ஏற்படுத்தும். இதனால் கோடையில் காரமான உணவுகளை தவிர்ப்பது அல்லது குறைந்த அளவில் பயன்படுத்தலாம்.
இஞ்சி: உணவுக்கு மனம் கொடுப்பதோடு சிறந்த சுவையையும் சேர்த்து கொடுக்கிறது இஞ்சி . இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இஞ்சி உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் ஒரு சூடான மசாலா. வியர்வை உண்டாக்கும். சர்க்கரை நோய், ரத்தக் கசிவு பிரச்னை உள்ளவர்கள் கோடைக்காலத்தில் இஞ்சி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
பூண்டு: உடல் எடையை குறைக்கவும், பசியை அடக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பூண்டு பயன்படுகிறது. ஆனால் கோடையில் இதை மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் பூண்டில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் கோடையில் இதை சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் அது உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. இது வாய் துர்நாற்றம், ஆசிட் ரிஃப்ளக்ஸ், இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
மிளகு: மிளகு ஒரு சூடான மசாலா பொருள். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை கணிசமாக அதிகரிக்கிறது. கோடையில் இதை அதிகமாக எடுத்துக் கொள்வது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். கருப்பு மிளகு உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில மருந்துகளின் செயல்திறனையும் குறைக்கலாம். மருந்துகளுடனான தொடர்பு காரணமாக இது ஒவ்வாமைக்கு வழிவகுக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மசாலா. வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. எடை குறைக்க உதவுகிறது. ஆனால் கோடையில் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அதிக வியர்வையுடன் மற்ற சில பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
கரம் மசாலா: சிலர் கரம் மசாலா இல்லாமல் சைவ உணவுகளை கூட செய்ய மாட்டார்கள். ஆனால் கோடையில் இந்த கர மசாலாவையும் குறைக்க வேண்டும். இல்லையெனில் அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். கரம் மசாலாவில் மாஸ், கிராம்பு, பிரியாணி இலைகள் மற்றும் சோம்பு ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இது உடலை அதிகமாக வியர்க்க வைக்கிறது. எனவே இந்த மசாலாவை தவிர்ப்பது நல்லது. இந்த வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய, இயற்கையான முறையில் நல்ல உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம்.
Read More: 2025 வரை கட்டணம் கிடையாது.. BSNL-ன் பலே அறிவிப்பு!! விவரம் இதோ..