For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் தொடங்கியது கோடை மழை..!! அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..?

04:13 PM May 08, 2024 IST | Chella
தமிழ்நாட்டில் தொடங்கியது கோடை மழை     அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை     எங்கெங்கு தெரியுமா
Advertisement

தமிழ்நாட்டில் கோடை மழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இம்முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்தாண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் என 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும். மே 10ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பூர் என 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மே 11ஆம் தேதியை பொறுத்த வரை கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி என 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலையை பொறுத்த அளவில், வரும் 12ஆம் தேதி வரை அடுத்த 5 தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அதேபோல தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2º-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலையை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலையில் / இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : அடிக்குற வெயிலுக்கு இந்த உணவுகளை தொடவே தொடாதீங்க..!! அப்புறம் பிரச்சனை உங்களுக்கு தான்..!!

Advertisement