Summer | பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!
ஆந்திர மாநிலத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை முன்னதாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதமே வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மாநிலங்களில் இப்போதே ஒரு சில பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தொட்டுவிடுகிறது. அதனால், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், கோடை வெயில் அதிகமாக இருப்பதால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை முன்னதாகவே அறிவிக்க ஆந்திர அரசின் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் இருப்பதால் பள்ளிச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வயதானவர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் 12.30 மணி வரை அரைநாள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த கல்வியாண்டு முழுவதும் அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். மேலும், மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறையை தொடங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. விடுமுறையை ஜூன் 13ஆம் தேதி வரை நீடிக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
Read More : Seeman | நாம் தமிழர் கட்சி ’மைக்’ சின்னத்தில் போட்டி..!! சீமான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!