கரும்பு விவசாயிகளே..!! இனிப்பான செய்தி..!! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு..!! டன்னுக்கு எவ்வளவு தெரியுமா..?
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு ரூ. 247 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இந்த அரசு, கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன் சர்க்கரை ஆலைகளின் செயல்திறனும் அதிகரித்து வருகிறது. முதல்வரின் ஆணைப்படி, 2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மத்திய அரசு அரசு 2023-24இல் அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ. 2919.75/-ஐக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கிடும் வகையில், ரூ.247 கோடி நிதியினை மாநில நிதியில் இருந்து அரசு வழங்கி ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் 2 பொதுத்துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215-ஐ சேர்த்து, டன்னுக்கு ரூ.3134.75 விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : மகளிர் உரிமைத்தொகை..!! செம குட் நியூஸ் சொன்ன உதயநிதி..!! விரைவில் உங்களுக்கும் ரூ.1,000 வரப்போகுது..!!