முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வியர்வை நாற்றத்தால் அவதியா?… இனி செண்ட்டே தேவையில்லை!… இந்த நேச்சுரல் டிப்ஸை பயன்படுத்தி வாசனையுடன் இருங்க!

05:20 PM Nov 22, 2023 IST | 1newsnationuser3
Advertisement

நமது உடல் எப்போதும் வாசனையாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் பல வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் கூடவே அனுபவிப்போம். ஏனென்றால் அந்த அளவுக்கு வாசனை திரவியங்கள் முக்கியத்துவம் பெறப்பட்டுள்ளது. பணி செய்யும் இடங்களிலும் பயணிக்கும் போதும் நம் மீது வியர்வை நாற்றம் அடித்தால் பலரும் நம்மை ஒரு மாதிரி பார்க்க தொடங்கி விடுவார்கள்,இனி இந்த கவலையே வேண்டாம் இந்த பதிவில் இயற்கையான முறையில் வாசனை பொடி தயார் செய்வது எப்படி என பார்ப்போம்.

Advertisement

தேவையான பொருட்கள்: காய்ந்த பன்னீர் ரோஜா இதழ் பொடி= 50 கிராம், கஸ்தூரி மஞ்சள்= 50 கிராம், விரலி மஞ்சள்= 50 கிராம், கோரைக்கிழங்கு= 50 கிராம், கார்போக அரிசி= 50 கிராம், செண்பக மொட்டு= 50 கிராம், ஆவாரம்பூ பொடி= 50 கிராம், முல்தானி மட்டி= 50 கிராம் இவை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

இவற்றை காய வைத்து பவுடராக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் கடலை மாவு சேர்த்து பயன்படுத்த வேண்டும். மேலே கூறப்பட்டுள்ளவற்றை அரைத்து எடுத்தால் எவ்வளவு அளவு வருகிறதோ அதிலிருந்து முக்கால் மடங்கு கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள பவுடர் 300 கிராம் என்றால் நாம் கடலை மாவு 200 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒரு காற்று புகாத பாத்திரத்திலோ கண்ணாடி பாட்டிலிலோ சேகரித்து வைக்க வேண்டும். தேவைப்படும்போது எடுத்து உடலில் தேய்த்து குளித்து வரவேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது பயன்படுத்த வேண்டும். முகத்தில் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் முகம் மிகவும் சாப்டான தோலை கொண்டுள்ளது. ஆகவே அதற்கென பல ஃபேஸ் மாஸ்க் உள்ளது அதை பயன்படுத்தவும்.

இதில் நாம் சேர்த்துள்ள ரோஜா இதழ் பொடி உடலில் நல்ல வாசனையும் சருமம் மென்மையாக இருக்கவும் உதவும். இதில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் கிருமி நாசினியாகவும் உடம்பில் தொற்று ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. கோரைக்கிழங்கு மற்றும் கார்போக அரிசி இறந்த செல்களை அகற்றுகிறது. முல்தானி மெட்டி உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். மேலும் செண்பக மொட்டு நல்ல வாசனையாக இருக்கும் இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆவாரம் பூ போடி சருமத்திற்கு நல்ல பளபளப்பை கொடுத்து புத்துணர்வை ஏற்படுத்தும்.

Tags :
இனி செண்ட்டே தேவையில்லைநேச்சுரல் டிப்ஸ்வாசனையுடன் இருக்கவியர்வை நாற்றத்தால் அவதியா?
Advertisement
Next Article