For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? மிளகை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. சீக்கிரமே சரியாகலாம்..!!

08:30 AM Nov 18, 2024 IST | Mari Thangam
சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா  மிளகை இப்படி யூஸ் பண்ணி பாருங்க   சீக்கிரமே சரியாகலாம்
Advertisement

உங்களில் பலர் சைனஸ் பிரச்சனை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.‌ இது மூக்கடைப்பு, தலைவலி, முகத்தில் அழுத்தம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கி பலரை அவதிப்படுத்தும்.‌ எனவே, இது பலருக்கு பெரும் தொந்தரவாகவே இருந்து வருகிறது. சைனஸ் என்பது நம் தலையில் உள்ள காற்று நிரப்பப்பட்ட குழிகளைக் குறிக்கிறது. இந்தக் குழிகள் நம் மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் அமைந்துள்ளன. சைனஸின் முக்கிய செயல்பாடு நாம் சுவாசிக்கும் காற்றை ஈரப்பதமாக்குவதும், வெப்பப்படுத்துவதும் ஆகும். மேலும், இது நம் குரலின் ஒலிக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

Advertisement

சைனஸ் பிரச்சனையின் அறிகுறிகள்: 

  • மூக்கடைப்பு 
  • முகத்தில் அழுத்தம் 
  • தலைவலி 
  • கண்ணம், நெற்றி, பற்களில் வலி 
  • வீங்கிய முகம் 
  • காய்ச்சல் 
  • சளி 
  • வாசனைகளை உணர முடியாமை 
  • தொண்டை வலி

சைனஸ் பிரச்சினைக்கான சிகிச்சை அது எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை பொறுத்து மாறுபடும். இதற்கு பொதுவாக வலி நிவாரணிகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் போன்றவை கொடுக்கப்படும். வீட்டு வைத்திய முறைகளில் நீராவி பிடித்தல், உப்பு நீரைக் கொண்டு மூக்கை சுத்தம் செய்தல் போன்ற முறைகளைப் பின்பற்றி நிவாரணம் அடையலாம். எந்த மருத்துவ சிகிச்சையும் பலன் அளிக்காத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இந்த சைன்ஸ் பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டும் எந்த பயனும் இல்லையா? அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை மட்டும் ஒருமுறை செய்து பார்க்கவும். நிச்சயம் சைன்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

1)கருப்பு மிளகு - 10
2)தண்ணீர் - ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:

* சைனஸ் பிரச்சனை குணமாக கருப்பு மிளகு பெரிதும் உதவுகிறது.இந்த கரு மிளகு 10 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்கு சைன்ஸ் பாதிப்பு இருந்தால் 5 கரு மிளகு மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

* இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து எடுத்து வைத்துள்ள கரு மிளகை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.மிளகு கருகிடாமல் பார்த்துக் கொள்ளவும்.

* இந்த மிளகை ஆறவிட்டு உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள கரு மிளகு பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் சைனஸ் பாதிப்பு நீங்கும். கருமிளகு நீர் பருக பிடிக்கவில்லை என்றால் மிளகுத் தூளை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். நிச்சயம் ஒரு வாரத்தில் சைன்ஸ் பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.

( மறுப்பு : மேலே குறிப்பிட்ட செய்தி தகவலுக்காக மட்டுமே.. உங்கள் உடல் நலம் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன் மருத்துவரை அனுகவும்)

Read more ; ‘Pushpa 2 The Rule’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு..!! தெறிக்க விடும் அல்லு அர்ஜூன்..

Tags :
Advertisement