For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நுரையீரல் பிரச்சனையால் அவதி..!! நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் திடீர் மரணம்..!!

Megastar Chiranjeevi's ex-nephew and Sreeja's ex-husband Sirish Bharadwaj passed away.
02:04 PM Jun 19, 2024 IST | Chella
நுரையீரல் பிரச்சனையால் அவதி     நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் திடீர் மரணம்
Advertisement

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகனும், ஸ்ரீஜாவின் முன்னாள் கணவருமான சிரிஷ் பரத்வாஜ் காலமானார்.

Advertisement

சிரிஷும் - ஸ்ரீஜாவும் காதலித்து வந்த நிலையில், தங்கள் பெற்றோரை எதிர்த்து 2007ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த செய்தி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். கடந்த 2012இல் ஷிரிஷ் பரத்வாஜ் மீது ஸ்ரீஜா தன்னை துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஸ்ரீஜாவின் முதல் கணவர் நுரையீரல் நோயால் உயிரிழந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிரிஷ் பரத்வாஜ் சில நாட்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

விவாகரத்துக்குப் பிறகு, ஷிரிஷ் பரத்வாஜ் வேறொரு பெண்ணை மணந்தார். பின்னர் ஸ்ரீஜா கல்யாண் தேவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீஜா மற்றும் ஷிரிஷ் பதர்வாஜ் ஆகியோருக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது அவர் ஸ்ரீஜாவிடம் உள்ளார். மறுபுறம், ஸ்ரீஜா கல்யாண் தேவ் உடன் மற்றொரு குழந்தை பெற்றெடுத்தார். ஸ்ரீஜாவின் இரண்டாவது கணவர் சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. சிரிஷ் பரத்வாஜைப் பொறுத்தவரை, அவருக்கு மென்பொருள் நிறுவனம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது நுரையீரல் செயலிழப்பால் சிரிஷ் பரத்வாஜ் மரணம் அடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : அதிர்ச்சி..!! அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சுட்டுக்கொலை..!! இளைஞர் வெறிச்செயல்..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement