திடீரென வகுப்பறையில் இருந்து வெளியேறி 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!! மாணவனின் பதபதைக்கும் சிசிடிவி காட்சி..!!
கல்லூரி மாணவர் ஒருவர், 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் நாராயணா கல்லூரியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று காலை கல்லூரியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது, தனது நண்பருடன் அமர்ந்திருந்த மாணவர் ஒருவர், திடீரென ஆசிரியரிடம் கூட சொல்லாமல் வகுப்பறையை விட்டு வெளியேறி, 3-வது மாடியில் இருந்து குதித்தார்.
இந்த காட்சிகள் வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், வகுப்பு நடந்து கொண்டிருந்தபோதே அந்த மாணவர் வெளியேறுவதை காணலாம். தடுப்பு சுவரை நோக்கி நடந்துச் சென்ற மாணவன், திடீரென அதன் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். என்ன நடந்தது என்று பார்க்க அவரது வகுப்பு நண்பர்களும் அறையை விட்டு வெளியேறினர். மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், மாணவனின் அருகில் இருந்த நண்பரிடம் ஏதாவது சொன்னாரா..? என விசாரணை நடைபெற்று வருகிறது.