திடீரென கார் மீது மோதிய பேருந்து..!! நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி மகள்..!! நடந்தது என்ன..?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது மனைவி டோனா. இவர்களுக்கு சனா என்ற மகள் உள்ளார். இவருக்கு தற்போது 23 வயதாகும் நிலையில், லண்டன் பல்கலைக் கழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பு முடித்து, உயர் நிறுவனத்தில் இன்டர்னாக இருந்து வந்தார். இந்நிலையில், சனா சென்ற கார், கொல்கத்தா டயமண்ட் ஹார்பர் சாலையில் கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஒன்று கங்குலி மகள் சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் சனாவுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், அவரை கார் ஓட்டுனர் விரட்டிச் சென்று பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். மேலும், காருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பாக கங்குலி மகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேற்று மாலை ஏற்பட்ட இந்த சம்பவம் இன்றுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விபத்தை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் ஏராளமானோர் கங்குலியை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.