முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கரையோர மக்களுக்கு திடீர் எச்சரிக்கை..!! பாதுகாப்பா இருங்க..!! மாவட்ட ஆட்சியர் பரபரப்பு அறிக்கை..!!

10:19 AM Jan 06, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விடுத்துள்ள அறிக்கையில், “கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதனப் பொருள்களை கவனத்துடன் கையாள வேண்டும். மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றில் குளிக்கவோ, கரையோரப் பகுதிகளுக்குச் செல்லவோ வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல், நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags :
ஆற்றங்கரையோர மக்கள்தூத்துக்குடி மாவட்டம்மாவட்ட ஆட்சியர்வானிலை ஆய்வு மையம்
Advertisement
Next Article