முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம்..!! சென்னை லாட்ஜில் தங்கியிருந்த குற்றவாளிகள்..!! NIA அதிர்ச்சி தகவல்..!!

07:49 AM Mar 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் வழக்கில் சந்தேகிக்கப்படும் 2 பேர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான சில பொருட்களும் தடயவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

விசாரணையில் இந்த குண்டு சம்பவத்தின் பின்னணியில் பல மர்மங்கள் நீடித்ததால் இந்த வழக்கு பெங்களூரு காவல்துறையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)வுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, என்ஐஏ அதிகாரிகள் குண்டுவெடிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். அப்போது, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம், குறிப்பாக குற்றவாளிகள் பயன்படுத்திய தொப்பி ஒன்று மூலம் துப்பு துலங்கியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ராமேஸ்வரம் கபே உணவகத்தில் குண்டு வைத்து சென்ற நபர் மற்றும் அதற்கு உதவியதாக கூறப்படும் நபர், கடந்த 2022இல் பெங்களூருவில் சதிச்செயலில் ஈடுபட்டதாக முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா என தெரியவந்துள்ளது. இருவரும் அப்போதே தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அறிவித்து இருந்தது தெரியவந்தது. ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா ஆகியோர், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில் முஸவீர் ஹூசைன் ஷாகிப் அணிந்து இருந்த தொப்பி சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் வாங்கியதும், வெடிகுண்டு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட தொப்பி மூலமே இந்த வழக்கில் துப்புதுலங்க உதவியாக இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவரும் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து பெங்களூருவில் இருந்து கேரளா வழியாக தமிழகம் வந்து பிறகு சென்னை வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக விசாரணை மூலம் உறுதியாகியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : Annamalai | ”டாய்லெட் பேப்பராக திமுகவின் தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள்”..!! வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!!

Advertisement
Next Article