For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திடீர் திருப்பம்..!! திமுக பக்கம் சாய்ந்தார் தமிமுன் அன்சாரி..!! அதிர்ச்சியில் எடப்பாடி..!!

01:15 PM Mar 19, 2024 IST | 1newsnationuser6
திடீர் திருப்பம்     திமுக பக்கம் சாய்ந்தார் தமிமுன் அன்சாரி     அதிர்ச்சியில் எடப்பாடி
Advertisement

மக்களவைத் தேர்தலை வெறும் அரசியல் களமாக பார்க்கவில்லை எனவும், ஜனநாயகத்திற்கு பாசிசத்திற்கும் உள்ள போட்டியாக பார்ப்பதாகவும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி இன்று சந்தித்தார். அப்போது அவர் வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, ”நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவோம். முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம். சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டுமானால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்.

இந்த மக்களவைத் தேர்தலை வெறும் அரசியல் களமாக பார்க்கவில்லை, ஜனநாயகத்திற்கு, பாசிசத்திற்கும் உள்ள போட்டியாக பார்க்கிறேன். அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் முதன்மையான நோக்கம் ஜனநாயகத்தை பாதுகாப்பது தான். கடல் கொள்ளையர்களை வீழ்த்த வேண்டும். அதற்காக கட்டுமரத்தில் பயணம் செய்வதா? போர்க் கப்பலில் பயணம் செய்வதா? என்று யோசிக்க வேண்டும். போர்க்கப்பலில் பயணம் செய்தால் தான் கடல் கொள்ளையர்களை வீழ்த்த முடியும்” என்று தெரிவித்தார்.

கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்திருந்தார் தமிமுன் அன்சாரி. இந்நிலையில், திடீர் திருப்பமாக அவர் திமுக பக்கம் சாய்ந்தது அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இக்கட்சியை சேர்ந்த சிலர் அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : Annamalai | பாஜக வேட்பாளர்களை இறுதி செய்ய டெல்லி செல்கிறார் அண்ணாமலை..!!

Advertisement