முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திடீர் திருப்பம்..!! பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பு..? NIA கிடுக்குப்பிடி விசாரணை..!!

04:35 PM Apr 05, 2024 IST | Chella
Advertisement

பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரித்து வருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறது. உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு தப்பிச்சென்ற நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள விசாரணை அதிகாரிகள், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஷிவமோகா, பெல்லாரி சிறைச்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷிவமோகா பகுதியில் இருந்து இரண்டு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்திருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பாஜக நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று பாஜக நிர்வாகியான சாய் பிரசாத்திடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மரணம் நிச்சயம்..!! கொரோனாவை விட 100 மடங்கு பவர்ஃபுல்..!! நடுங்க வைக்கும் H5N1 வைரஸ்..!! அறிகுறிகள் என்ன..?

Advertisement
Next Article