For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திடீர் மூச்சுத்திணறல்..!! விஜயகாந்த் குடும்பத்தினருடன் அவசர ஆலோசனை..!! வெளியானது அதிர்ச்சி தகவல்..!!

10:04 AM Nov 30, 2023 IST | 1newsnationuser6
திடீர் மூச்சுத்திணறல்     விஜயகாந்த் குடும்பத்தினருடன் அவசர ஆலோசனை     வெளியானது அதிர்ச்சி தகவல்
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய உடல்நலம் குறித்து வதந்திகள் கிளம்பின. இதையடுத்து, தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், நேற்றைய தினம் மியாட் மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில், விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினருடன் மருத்துவர்கள் குழு அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும், விஜயகாந்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு, அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement