For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்தின் எதிரொலி ; கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு..!!

11:18 AM May 20, 2024 IST | Mari Thangam
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்தின் எதிரொலி   கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு
Advertisement

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

Advertisement

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அஜர்பைஜானின் ஜோல்ஃபா என்ற இடத்தில் அடந்த வனம் மற்றும் மலைப்பகுதியில் சுமார் 17 மணி நேரம் கழித்து உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அஜர்பைஜானில் இருந்து திரும்பும் போது மோசமான வானிலை காரணமாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் “கடின தரையிறக்கம்” செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்தது. ஆனால், அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு எதிர்பாராத பேரழிவு போன்ற பல காரணங்களால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என பல தளங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் - ஈரான் மத்தியில் கடுமையான பிரச்சனை நிலவி வரும் வேளையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பெரும் சர்ச்சையாக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். குறிப்பாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கிங்மேக்கராக இருக்கும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நேரத்தில் பெரிதும் பாதிக்கப்படும்.

சர்வதேச சந்தையில் முக்கிய பென்ச்மார்க் எண்ணெய் ஆக இருக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 32 சென்ட் (0.4%) அதிகரித்து $84.30 ஆக உயர்ந்தது. இது மே 10 ஆம் தேதிக்குப் பின்பு பதிவான அதிகபட்ச விலையாகும். இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 5 சென்ட் உயர்ந்து 80.11 டாலராக அதிகரித்தது. இது மே 1 ஆம் தேதிக்குப் பின்பு பதிவான அதிகபட்ச விலையாகும். பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் WTI கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி-யின் மரணம் முக்கியமான காரணமாகும்.

Advertisement