திடீரென போன கரண்ட்…! படுக்கையறைக்குள் புகுந்த பக்கத்து வீட்டுக்காரன்..! கணவன் என்று நினைத்ததால் பெண்ணுக்கு நடந்த கொடுமை…!
உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் ஒரு நூதன சம்பவம் நடந்துள்ளது, வீட்டில் கரண்ட் இல்லாத நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒரு நபர், தன் அண்டை வீட்டில் வசிக்கும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல் நிலையத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் நீதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
என்ன நடந்தது? கடந்த ஜூலை 18 ஜூலை நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரில் “ எனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் இல்லாததை பயன்படுத்தி என் பக்கத்து வீட்டில் வசிக்கும் கஞ்சு என்ற நபர், அமைதியாக வந்து என் பக்கத்து படுக்கையில் படுத்துக் கொண்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தனது புகாரில் “ இருட்டில் என் கணவன் வந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால் சிறிது நேரத்தில் கஞ்சுவின் செய்கை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் கூச்சலிட்டதால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அப்போது சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கஞ்சுவின் சகோதர்களான, கமாய், போரா இருவரும், பாதிக்கப்பட்ட பெண்ணை அவதூறாக பேச தொடங்கி உள்ளனர். மேலும் போலீசார் வருவதற்குள், மூன்று சகோதரர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து கோபிகஞ்ச் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றபோது, காவல் துறையினர் தன் புகாரை எடுத்துக் கொள்ளாமல் காவல் நிலையத்தில் இருந்து தன்னை வெளியேற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார். இது குறித்து, ஆகஸ்ட், 7ல், அவர் நீதிமன்றத்தில் அந்த பெண் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கஞ்சு மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டது.
Read more: ரூ7,500 கோடி மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்!. டெல்லியில் அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல்!