திடீரென தள்ளிவைப்பு..!! எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் புதிய தேதியை அறிவித்த இஸ்ரோ..!!
புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 16ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் ஆயுட்காலம் ஒரு ஆண்டுகாலமாகும். சுமார் 175 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும்.
இது மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம்பெற இருக்கிறது. சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வரிசையில் கடைசி ஏவுகணை இது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. வரும் 16ஆம் தேதி காலை 9.17 மணிக்கு எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக இந்த ராக்கெட் சுதந்திர தினத்தில் (ஆக.15) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக, அந்தத் திட்டம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Read More : வலியால் கதறி துடித்த 5 வயது சிறுமி..!! ஓவிய ஆசிரியரால் தீவிர சிகிச்சை..!! பள்ளியில் வைத்து பலாத்காரம்..!!