For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திடீர் நிலச்சரிவு..!! 172 கிராமங்களை அழித்த வெள்ளம்..!! கரைபுரண்டு ஓடும் ஆறுகள்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

Ten people have died and two more are missing after a landslide and flash flood hit the Indonesian island of Java.
04:45 PM Dec 09, 2024 IST | Chella
திடீர் நிலச்சரிவு     172 கிராமங்களை அழித்த வெள்ளம்     கரைபுரண்டு ஓடும் ஆறுகள்     10 பேர் உயிரிழப்பு
Advertisement

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் மயமாகி உள்ளனர்.

Advertisement

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் மயமாகி உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்தது. 170-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இந்நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் 172 கிராமங்களை அழித்தது மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 31 பாலங்கள், 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் நெல் வயல்களை அழிந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடந்த மாதம் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Read More : அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.25,000 சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
Advertisement