முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசுப் பேருந்தில் திடீர் பிரசவ வலி..!! ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல்..!! அழகாக பிறந்த பெண் குழந்தை..!! அரசு மாஸ் அறிவிப்பு..!!

A woman who was traveling in a government bus went into labour, so she immediately stopped the bus and gave birth to a baby girl with the help of passengers.
03:41 PM Jul 09, 2024 IST | Chella
Advertisement

அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்னுக்கு பிரசவவலி ஏற்பட்டதால், உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகள் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த முஷிராபாத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஸ்வேதா ரத்தினம், அரசுப் பேருந்தில் பகதூர்புரா செல்ல ஏறினார். பஸ்சில் செல்லும்போது திடீரென அவருக்கு பிரசவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்தை அந்த ஓட்டுநர் சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் பயணிகளை கீழே இறக்கிவிட்டு பெண் கண்டக்டர் பி.சரோஜா சக பெண் பயணிகளுடன் இணைந்து பஸ்சிலேயே பிரசவம் பார்த்ததில் ஸ்வேதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது தாய், குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஜ்ஜனார் ஆகியோர் பெண் கண்டக்டருக்கும் , டிரைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தெலங்கானா அரசுப் பேருந்தில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணத்திற்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ரூ.14 லட்சம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? முதலீடு எவ்வளவு..? விவரம் உள்ளே..!!

Tags :
அரசுப் பேருந்துதெலங்கானா மாநிலம்பிரசவ வலிபெண் குழந்தை
Advertisement
Next Article