For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மதுரை தனியார் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து..!! நோயாளிகளின் நிலை என்ன..? பெரும் பரபரப்பு..!!

A fire broke out at a private hospital in the early hours of the morning, and firefighters were called in to try to extinguish the blaze and bring it under control.
08:58 AM Dec 31, 2024 IST | Chella
மதுரை தனியார் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து     நோயாளிகளின் நிலை என்ன    பெரும் பரபரப்பு
Advertisement

மதுரை மாவட்டம் புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மருத்துவமனையின் 3-வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை தற்போது செயல்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

மருத்துவமனையில் தீவிபத்து நடைபெற்ற இடத்தை காலி செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் தற்போது செவிலியர்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 9 நாட்களுக்கு விடுமுறையா..? மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி..!! வெளியாகும் அறிவிப்பு..?

Tags :
Advertisement