திடீரென வந்த அறிவிப்பு..!! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றுங்கள்..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!
சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை கொட்டித் தீர்த்தது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. மறுபுறம் டெல்டா மாவட்டங்களில் மழை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கின. இன்று வரை டெல்டா மாவட்டங்கள் இந்த பிரச்னையில் இருந்து இயல்பு நிலைக்கு முழுவதுமாக திரும்பவில்லை.
இது ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு வாரத்திற்கு முன்னர் உருவானது. இது வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. அதுமட்டுமின்றி, இன்று இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Read More : மாதம் ரூ.40,000 சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..? விவரம் உள்ளே..!!