"நயன்தாரா சிதறு தேங்காய் பிச்சைக்காரி..." வெளுத்து வாங்கிய சுச்சி...
சமீபத்தில், நடிகை நயன்தாரா ஹாலிவுட் ரிப்போர்ட்டர் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தனது ஆவணப்பட சர்ச்சை குறித்தும், தன் தனிப்பட்ட வாழ்க்கை, விமர்சனங்கள் போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அவர் அளித்த அந்த பேட்டி, தமிழ்நாட்டில் மிகவும் வைரலானது. இதனால் யூடியூபர்ஸ் பலரும் நயன்தாராவிற்கு எதிரான கருத்துகளை கூறி விமர்சித்தனர். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சுசித்ரா, நயன்தாராவை குறித்து பல மோசமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, தனுஷுக்கு எவ்ளோ அகங்காரம் இருக்கோ அதவிட அதிக அகங்காரம் நயன்தாரவுக்கு இருக்கு. நயன்தாராவோட உண்மையான முகம் இப்ப தான் எல்லாருக்கும் தெரிய வருது. நயன்தாரா கொடுத்த பேட்டியில ரெண்டு விஷயத்த யூஸ் பண்ணி ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிக்க ட்ரை பண்ணாங்க. அதுல ஒன்னு தான் தனுஷுக்கு எதிரா தன்னோட குற்றச்சாட்ட நிறைய மக்களுக்கு எடுத்துட்டு போகுறது. இன்னொன்னு பாலிவுட்ல இப்படி பேசி வாய்ப்பு கிடைக்க பாக்குறது" என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "இதுவரைக்கும் நான் நடிச்ச படங்கல பாத்த மக்கள விட, என்னோட டாக்குமெண்ட்ரிய பாத்த மக்கள் அதிகம்ன்னு, நயன்தாரா சொல்லிருப்பாங்க. இதுல எவ்வளவு அகங்காரம் இருக்கு. தென்னிந்தியாவுல எனக்கு சப்போர்ட் பண்ண யாருமே இல்ல, அதனால நீங்க என்ன ஏத்துகோங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு. என்ன பேசுறதுன்னு தெரியாம, ஒன்றரை மணி நேரம் ஏதோ ஒலறி வச்சிருக்காங்க. தனுஷ் இல்ல, முதல்ல நீங்க திருந்துங்க. அந்த இன்டர்வியூவ பாக்குற எல்லாருமே சிரிக்க தான் போறாங்க.
ஜோதிகா பேரழகன் பிச்சைக்காரின்னா, நயன்தாரா சிதறு தேங்காய் பிச்சைக்காரி. எப்படி ஒரு ரிப்போர்ட்டர அவுங்க குரங்குன்னு சொல்ல முடியும். அவுங்க எல்லாரு நயன்தாராவ பத்தி நிறைய நல்ல விஷயங்களையும் சொல்லிருக்காங்க. இப்போ தான் இவுங்களுக்குள்ள க்ளாஷ் வர ஆரம்பிச்சிருக்கு. இனி வர பிரச்சனையை நயன்தாரா தான் சந்திச்சு ஆகணும்" என்று பேசியுள்ளார்.
Read more: 10 வயது சிறுமியின் பிறப்புறுப்பை, இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரன்!!