இத்தனை சோகத்திலும் இப்படி ஒரு கேவலமான செயலா..? எப்படித்தான் மனசு வருதோ..? வயநாட்டில் அதிர்ச்சி..!!
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள நிலையில், அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, சூரல்மலை மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதியில் கடந்த வாரம் அடுத்தடுத்து 3 நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, முகாம்களில் தங்கி உள்ளனர். பலர் வீடுகளை பூட்டி விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில், யாரும் இல்லாத வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து உள்ளே இருந்த பொருட்களை கொள்ளையடிச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நிலச்சரிவு காரணமாக நாங்கள் வீட்டை விட்டு வெளியேறினோம். பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதில், இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்" என்றார்.
இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியிலோ அல்லது வீடுகளிலோ இரவு நேரங்களில் மீட்புப் பணி என்ற பெயரில் காவல்துறையின் அனுமதியின்றி, யாரும் நுழையக் கூடாது. அதையும் மீறி, அங்கு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read More : காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகிறது ஜாக்பாட் அறிவிப்பு..!! அகவிலைப்படி உயர்வு..?