ஃபேம் திட்டத்தின் கீழ் மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு மானியம்...!
ஃபேம் திட்டத்தின் கீழ் மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, அரசாங்கம் 2015 இல் FAME இந்தியா என்ற திட்டத்தை உருவாக்கியது. தற்போது, FAME India திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. FAME-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதில்லை. ஊக்கத்தொகை / சலுகை நுகர்வோருக்கு (வாங்குபவர்கள் / இறுதி பயனர்கள்) மின்சார வாகனங்களின் கொள்முதல் விலையில் முன்கூட்டிய குறைப்பு வடிவத்தில் வழங்கப்படுகிறது, இது இந்திய அரசால் உற்பத்தியாளர்களுக்கு திருப்பிச் செலுத்தப்படுகிறது.
ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களின் கொள்முதல் விலையில் முன்கூட்டியே குறைப்பு வடிவில் வாகனத்தை வாங்கும் நேரத்தில் ஊக்கத்தொகை / மானியம் வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (01.04.2019 முதல் 31.03.2024 வரை) உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் கோரிய ஊக்கத்தொகைக்காக மானியம் வழங்கப்படுகிறது.