தமிழகம் முழுவதும் அனைத்து தாலுகாக்களிலும் கீழமை நீதிமன்றங்கள்...! உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி..
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் கீழமை நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா அறிவுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புதுக்கோட்டை நீதிமன்றத்தை ரூ.15 கோடி மதிப்பிலான புனரமைப்புப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி; 140 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நீதிமன்றம் என்பது வெறும் கட்டடம் அல்ல. அது, அந்த கட்டடத்தில் வழக்கறிஞர்களின் மேற்கொள்ளப்படும் வாதங்களும், நீதிபதிகளின் தீர்ப்புரைகளையும் கொண்டது.
அவை அனைத்தும் அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய சாட்சியங்களாகும். மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் நீதிமன்றம் கொண்ட இந்த மாவட்டத்தைப் போலவே, அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து வட்டங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் கீழமை நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா அறிவுறுத்தி உள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய சட்ட துறை அமைச்சர் ரகுபதி; தமிழகத்தில் வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு 12 வட்டங்களிலும் நீதிமன்றம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற சூழலை மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும் பழைமையான கட்டடங்களைப் என்பதிலும், பாதுகாக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளான்.