முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோட்..! 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே...! ஜனவரி 2ம் தேதி வரை கால அவகாசம்...!

Students who are scheduled to sit for the 10th grade public examination have been given until January 2nd to make corrections to the list of names with their examination marks.
05:58 AM Dec 30, 2024 IST | Vignesh
Advertisement

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய ஜனவரி 2-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் கடந்த டிசம்பர் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் விடுபட்ட மாணவர்களை சேர்க்கவும், இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது. இதையடுத்து அனைத்துவித உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களும் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை ஜனவரி 2-ம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும்.

அதேநேரம் இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பெயர்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நீண்ட விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை தன்னிச்சையாக நீக்கக்கூடாது. சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களின் அனுமதி பெற்ற பின்னரே அத்தகைய மாணவர்களை இறுதி பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
certificateEducation websitepublic examTamilnadutn governmentதமிழ்நாடு
Advertisement
Next Article