முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களே..!! மீண்டும் பள்ளிகள் எப்போது திறப்பு..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!!

07:10 AM Apr 25, 2024 IST | Chella
Advertisement

ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாா்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை பொதுத்தோ்வு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தத் தோ்வுகள் ஏப்ரல் 12ஆம் தேதி முடிக்கப்பட்டு ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விட திட்டமிட்டிருந்தது.

இதற்கிடையே, 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப்ரல் 10, 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில், இறுதித் தோ்வுகள் ஏப்.23ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடா்ந்து மாணவா்களுக்கு நேற்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, வெயில் போன்ற காரணங்களால் பள்ளித் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் அறிவித்துள்ளார். இதே நாளில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும்.

Read More : கொலுசு, மெட்டி, ஒட்டியாணம் அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Advertisement
Next Article