முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களே ரூ.10,000 வழங்கும் தமிழ்நாடு அரசு..!! ஜனவரி 25ஆம் தேதி தேர்வு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

It has been announced that the “Tamil Nadu Chief Minister’s Aptitude Test” for 10th grade students will be held on January 25th.
10:59 AM Nov 28, 2024 IST | Chella
Advertisement

அரசுப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு” வரும் ஜனவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இத்தேர்வில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1,000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டில் ரூ.10,000 (மாதந்தோறும் ரூ.1,000) வழங்கப்படும். 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்படும்.

முதல் தாளில் கணிதம் தொடர்புடைய 60 வினாக்களும், இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய 60 வினாக்களும் இடம் பெறும். முதல் தாள் காலை 10 - 12 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 - 4 மணி வரையும் நடைபெறும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 30.11.2024 முதல் 09.12.2024 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50 செலுத்தி, டிசம்பர் 9ஆம் தேதிக்குள் மாணவர்கள் படிக்கும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : விஜய்யை தொடர்ந்து புதிய அரசியல் கட்சி துவங்கும் பிரபல நடிகர்..!! தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டி..?

Tags :
10ஆம் வகுப்புஉதவித்தொகைமாணவர்கள்முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
Advertisement
Next Article