மாணவர்களே..!! பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பை கவனிச்சீங்களா..? செப்.20ஆம் தேதி முதல் ஆரம்பம்..!!
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில வழிக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உட்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018 முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கான காலண்டு தேர்வு செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி, 27அஅம் தேதி வரை நடைபெறுகிறது. 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்.19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது.
தேர்வு நேரத்தை பொறுத்தவரை, 6ஆம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ஆம் வகுப்புகளுக்கு பிற்பகல் 1.15 மணி முதல் 3.15 வரையும், 8ஆம் வகுப்புகளுக்கு 9.30 முதல் 12 மணி வரையும், 9ஆம் வகுப்புகளுக்கு 1.15 முதல் 4.30 மணி வரையும், 10ஆம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.45 வரையும் தேர்வு நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை மொத்தமே ஐந்து நாட்கள் மட்டும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ‘மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம்’..? திமுக அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்..!!