’மாணவர்களின் P.E.T. வகுப்புகளை ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள்’..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு..!!
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழக அரசு சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பள்ளி மாணவர்களின் P.E.T பீரியட் வகுப்புகளை கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காமல் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் கணிதம் மற்றும் அறிவியல் வகுப்புகளை கூட மாணவர்கள் விளையாட்டுக்காக அனுமதிக்கலாம் என்றும், அதன் மூலம் மாணவர்கள் விளையாட்டில் வெற்றி பெற்றால் அரசு பள்ளிகளுக்கு அதிக கேடயங்கள் கிடைக்கும்” என கூறினார்.
இதையடுத்து, தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், 114 அரசு பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது என்றும், கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 180 அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்ப்பட்டது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.