மாணவர்களே..!! மீண்டும் தொடர் விடுமுறை..!! பிப்ரவரி மாதத்திலும் கொட்டிக் கிடக்கும் லீவுகள்..!! அரசு ஊழியர்களும் செம குஷி..!!
பொங்கல் விடுமுறை நேற்று ஞாயிறுடன் முடிந்த நிலையில், அடுத்த தொடர் விடுமுறை எப்போது என்ற ஆவல் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் ஜனவரி மாதம் விடுமுறை மாதமாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு பலர் சென்று வருகின்றனர். அதேபோல், பண்டிகை காலங்களிலும் இவர்கள் செல்கிறார்கள்.
அதிலும் தொடர் விடுமுறை வந்துவிட்டால், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்டோரையும் கையிலேயே பிடிக்க முடியாது. கடந்தாண்டு ஆயுத பூஜை விடுமுறையும் இப்படித்தான் வீக் எண்ட்டிற்கு பிறகு வந்ததால் தொடர் விடுமுறை கிடைத்தது. அதேபோல், இந்தாண்டு பொங்கல் பண்டிகையும் அப்படித்தான் வந்தது.
இந்நிலையில், இன்று விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்பியவர்கள், அடுத்த தொடர் விடுமுறை எப்போது என காலண்டரை பார்க்கத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம், திங்கள்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வராமல் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டதால் கடுப்பாகி உள்ளனர். இந்நிலையில் தான், அடுத்த மாதம் தைப்பூசம் அன்று அரசு விடுமுறை. அது செவ்வாய்க்கிழமை வருகிறது.
எனவே, திங்கட்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டால் போதும் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இதை விட்டால் மார்ச், ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். எனவே, மே மாதம்தான் சொந்த ஊர்களுக்கோ சுற்றுலா செல்லவோ திட்டமிட முடியும். இதனால் இந்த தைப்பூச விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க பலர் திட்டமிட்டு வருகின்றனர்.