பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! இந்த தேதி தான் கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், இந்தாண்டு இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை இயக்குநகரம் அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பிறப்பு சான்றிதழ் என்பது கட்டாயம் தேவைப்படுகிறது. பிறப்பு சான்றிதழ்களில் தவறுகளை எளிதாக சரி செய்ய முடியும். அதில் ஏதேனும், பிழை இருந்தால், அதை உடனே திருத்திவிடுவது நல்லது. இதற்கு பிறப்பு பதிவாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் யாரையாவது அணுக வேண்டும்.
உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பிழையை திருத்த வேண்டும் என்று ஒரு மனுவை விஏஓ அல்லது சுகாதார ஆய்வாளரிடம் கொடுக்க வேண்டும். பிறகு, குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால், டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இணைத்து கொடுத்தால் போதும். அதனை சரிபார்த்து, உங்கள் மனுவையும் ஏற்று, பிழையையும் திருத்தி தருவார்கள். இதை உடனே செய்வது நல்லது.
இந்நிலையில், பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், இந்தாண்டு இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை இயக்குநகரம் அறிவித்துள்ளது. மாவட்ட சுகாதார இயக்குநர்கள், பள்ளி மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பெயர் விடுபட்டிருந்தால், மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு தகவலளித்து பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : ’தமிழ்ப்புதல்வன்’ திட்டம்..!! உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்க இதையெல்லாம் பத்திரமா வெச்சிக்கோங்க..!!