மாணவர்களே கலந்தாய்வுக்கு தயாரா இருங்க..!! தேதி வெளியீடு..!! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கான தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11,000 இடங்கள் உள்ளது. இதில் 15 சதவீதமான 1,650-க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் இடங்களில் 86 இடங்கள் நிரப்பப்படவில்லை.
இதை வீணாகாமல் தடுக்கும் வகையில், இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்தது. இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இதனால், காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்துகிறது.
அதன்படி, மத்திய அரசு இடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கலந்தாய்வு குறித்த தகவல்களுக்கு tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறார். அகில இந்திய ஒதுக்கீடு - 16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் - 50, எய்ம்ஸ் - 3, சுயநிதி - 17 என மொத்தம் 86 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.