For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மேடையில் விஜய்யை கோபப்படுத்திய மாணவியின் தந்தை..!! புஸ்ஸி ஆனந்த் பார்த்துருந்தா அவ்வளவு தான்..!! வைரலாகும் வீடியோ..!!

He became angry with the student's father for abusing Vijay. The related video is currently going viral on social media.
01:05 PM Jul 06, 2024 IST | Chella
மேடையில் விஜய்யை கோபப்படுத்திய மாணவியின் தந்தை     புஸ்ஸி ஆனந்த் பார்த்துருந்தா அவ்வளவு தான்     வைரலாகும் வீடியோ
Advertisement

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பரிசுப் பொருட்களை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அனைத்து மாணவ, மாணவிகளையும், அவர்களுடைய பெற்றோர்களையும் தனது சகோதர சகோதரிகளாக நினைத்து விஜய் தோளில் கை போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.

Advertisement

அதேபோல், ஒரு மாணவி மீது கை போட்ட போது அந்த மாணவி ஏதோ சொல்ல விஜய்க்கு அது புரியவில்லை. அப்போது அந்த மாணவியே விஜய்யின் கையை தோளின் மீதிருந்து எடுத்துவிட்டு கைகளை கோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்நிகழ்வை விஜய் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், விஜய்யும் அதை ஃப்ரீயாகவிட்டுவிட்டு அதே புன்சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

இதற்கிடையே, விஜய்யை மேடையில் வைத்து வெறுப்பேற்றிய சம்பவங்களும் அரங்கேறின. வரிசையாக மாணவ, மாணவிகளுக்கு சான்று மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார் விஜய். அப்போது அவரிடம் விதவிதமான போஸ் கொடுத்து மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த வகையில், ஒரு மாணவியின் தந்தை மாஸ்டர் படத்தில் லோகேஷ் - விஜய் கொடுத்திருக்கும் போஸை விஜய்யிடம் கொடுக்கும்படி, அவர் கேட்டுள்ளார். இது விஜய்யை கடுப்பேற்றியதால், மாணவியின் தந்தையிடம் அவர் கோபப்பட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : களைகட்டிய அம்பானி வீட்டு கல்யாணம்..!! படையெடுத்த பிரபலங்கள்..!! அட இவரு கூடவா..?

Tags :
Advertisement