'மாணவர்களே நீங்க நினைக்கிற மாதிரி விடுமுறை விடமாட்டாங்க’..!! ’இந்த 7 காரணங்கள் இருந்தால்தான் விடுமுறை’..!!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு ஆட்சியர் விடுமுறை அளிப்பது வழக்கமாக உள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கும் நிலையில், விடுமுறை அளிக்கவில்லை. லேசான மற்றும் மிதமான மழை பெய்தாலே பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று மாணவர்கள் தவறாக நினைக்கிறார்கள்.
மழைகாலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு 7 கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. அந்த 7 கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
-- தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றாலோ, போக்குவரத்து பாதிக்கப்பட்டோலோ பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம். மிதமான மழைக்கு விடுமுறை கிடையாது.
-- மழை நிலவரத்தை ஆராய்ந்து 3 மணி நேரத்திற்கு முன்பாகவே விடுமுறை அளிக்க வேண்டும்.
-- முதன்மை கல்வி அலுவலர்கள் மழையின் தீவிரத்தை ஆராய்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
-- மழையின் தீவிரத்தை உணர்ந்து அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
-- மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக மழைநீர் வெளியேற்றப்பட்டு போதுமான வசதிகள் செய்து தரப்படும்.
-- மழை காரணமாக அளிக்கப்படும் விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும்.
-- திருவிழாக்களின் போது அளிக்கப்படும் விடுமுறையை வேறொரு நாளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும்.