For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு..!!

08:53 AM Mar 20, 2024 IST | 1newsnationuser6
மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க     விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்     இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு
Advertisement

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" (யுவ விஞ்ஞானி கார்யக்ரம்) என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

Advertisement

நடப்பாண்டு, இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர இன்றே (மார்ச் 20) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டை பொறுத்தவரை இந்த திட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் சிறந்த 337 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை மாணவர்களுக்கு ஏற்படுத்துவது. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் மாற்றங்களை இளம் மாணவர்கள் அறிந்து கொள்ள இந்த திட்டம் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

Read More : Election Breaking | தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரம்..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

Advertisement